விருதுநகர் அருகே சோகம்.! லாரி மோதி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசராகவன் (52). இவரது மனைவி சித்ரா. இந்நிலையில், சீனிவாசராகவன் மோட்டார் சைக்கிளில் விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சாலையில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அவழியாக எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாச ராகவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சீனிவாச ராகவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt bus driver killed in lorry collision in virudhunagar


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->