#Breaking : இணையதள சூதாட்டங்கள் தடை... அமைச்சரவையை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல்.!  - Seithipunal
Seithipunal


இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆன்லைன் விளையாட்டுக்களில் அடிமையாகி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ப்ளூவேல் கேம் விளையாடி பலரும் உயிரிழந்த நிலையில், அதன் பின்னர் பப்ஜி விளையாட்டை விளையாடி பலரும் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்தனர்.

இதனால் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக பிரீ ஃபையர் விளையாட்டை சிறுவர்கள் பலரும் விளையாட ஆரம்பித்தனர். ரம்மி போன்ற சூதாட்டங்களை விளையாடி பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கொடுக்கும்.

இந்த ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள சூதாட்டங்களை தடை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஒப்புதல் கொடுத்தது. இத்தகைய சூழலில், இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor approved online gambling ban order


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->