ஆளுநரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது - டி.ராஜா ஆவேசம்! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்து கொண்டது, அரசியல் சட்டம் நெறிமுறைகளுக்கு புறம்பானது எனவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் டி. ராஜா தெரிவித்துள்ளார். 

இது குறித்த அவர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசி இருப்பதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவை விவாதித்த உரை மற்றும் அதன் கருத்துக்களில் தனக்கு உடன்பாடு இல்லை என ஆளுநர் சொல்வது நியாயம் இல்லை. 

ஆளுநர் பாஜகவின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அதனால் தான் தமிழகத்தில் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என போராட்டங்கள் நடைபெறுகிறது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்பதே தேவையற்றவை ஆகும். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநர் பதவி தேவையற்றது என கருத்து உள்ளது. 

கேரள ஆளுநர் மாநில அரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகிறார். சாலைக்கு வந்து அமர்ந்து போராட்டம் செய்தார். இதெல்லாம் தான் ஆளுநரின் அடாவடித்தனம். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. 

இந்த சூழலில் தமிழக ஆளுநர் நடந்து கொண்டதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor action condemnable D Raja Obsession


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->