ஆட்சி, அதிகாரத்தில் பங்கு..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பரபரப்பு பேட்டி!
Governance participation in authority Karti Chidambaram MPs sensational interview
தேசிய கட்சியுடன் இணைந்தால்தான் திராவிட கட்சிகளுக்கு வாக்கு வங்கி பலமாக இருக்கிறது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.
சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தை பொருத்தவரை தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது.தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.
காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அனைத்து கட்சிகளுமே தேர்தலில் போட்டியிடும்போது அதிக இடத்தில் வெற்றி பெறவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதுபோன்று எங்களுடைய பலம் என்ன என்பதை அறிந்துதான் சீட் கேக்க முடியும். அதிக இடங்களை கேட்டு பெற ஆசை இருக்கிறது.
இதற்கு முன்பு காங்கிரஸ் மட்டும் பிரதானமாக இருந்தது. இப்போது பா.ஜனதாவும் வந்து இருக்கிறது. இந்த 2 கட்சிகளையும் தவிர்த்துவிட்டு மாநில கட்சிகள் மட்டும் கண்டிப்பாக அரசியல் செய்ய முடியாது.தமிழகத்தை பொருத்தவரை தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் இணைந்தால்தான் திராவிட கட்சிகளுக்கு வாக்கு வங்கி பலமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Governance participation in authority Karti Chidambaram MPs sensational interview