குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை?..!
Goverment of Tamil nau announces that it is not possible to provide Rs. 1000 to family card holders
நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதி அளித்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பிலும் உள்ளது. ஆனாலும் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் அந்த 1000 ரூபாய் எந்த அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பது குறித்து சில வதந்திகள் சென்ற வாரம் பரவின. இதற்கு தமிழக அரசு, அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் கவலைப்பட வேண்டாம் என அறிவித்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திமுக சொன்ன குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டத்தை விரைவில் செயல்படுத்தவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசு, கொரானா நிவாரண நிதியாக ரூ.4000 அளிக்கப்பட்டுள்ளதுடன் 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அதனால் குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.
English Summary
Goverment of Tamil nau announces that it is not possible to provide Rs. 1000 to family card holders