தென்காசி தீ விபத்து || 50 கடைகளில் ₹1 கோடி மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோவில் பின்புறத்தில் குற்றாலம் மெயின் அருவியின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடை ஒன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து நான்கு கடைகளுக்கு தீ பரவியது. இதனால் அங்கு கூடியிருந்த வியாபாரிகளும் பொதுமக்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 50 தற்காலிக கடைகள் தீயில் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் படியில் தீவிரமாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்த தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரிடம் தீயினால் சேதமடைந்த பொருட்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goods worth rs1 crore destroyed in 50 shops in tenkasi fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->