திருடர்களுக்கு தண்ணி காட்டிய அண்ணாச்சி..! அதிகாலையில் பதறியடித்து ஓடிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வியாசர்பாடி மார்க்கெட் எதிரே இருக்கும் சாலையில் மளிகை கடை ஒன்றை செல்வம் என்பவர் நடத்தி வந்துள்ளார். இவர் கடையின் மேல் தளத்தில் இருக்கும் வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருக்கின்றார். பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த நகையை எடுத்து கடையில் அவர் வைத்துள்ளார்.

அதில், 40 பவுன் நகையுடன் ஒரு லட்சம் ரொக்கமும் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். வழக்கம் போல காலையில் எழுந்து கடையை திறக்க வந்த பொழுது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்துள்ளது.

பின்னர் பதறியடித்து உள்ளே சென்று பார்க்க கடையில் இருந்த ஒரு லட்சம் ரொக்கம் 40 பவுன் நகை உள்ளிட சில பொருட்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவை பயன்படுத்தி கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது. கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருக்கின்றது. இதனை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold and money robbery in shop


கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
கருத்துக் கணிப்பு

ரஜினியும் கமலும் தேவைப்பட்டால் ஒன்றிணைவோம் என கூறியிருப்பது?!
Seithipunal