வினோத உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி - உளுந்தூர் பேட்டையில் அதிர்ச்சி.!!
goat born different shape in ulunthurpettai
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் தனது வீட்டில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் ஆனந்தன் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று நேற்று இரண்டு குட்டிகளை ஈன்றது. அதில் ஒரு குட்டி மனித முகத்துடன் வித்தியாசமான தோற்றத்தில் இறந்த நிலையில் பிறந்தது. இதையறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆட்டுக்குட்டியை வியப்புடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்து சென்றனர்.
அதுமட்டுமல்லாமல், ஆடு இது போன்று வினோத உருவத்தில் குட்டியை ஈன்றதால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்று பீதியடைந்த மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
goat born different shape in ulunthurpettai