காவலர்கள் தீயில் எரித்த கஞ்சா போட்டலங்கள்...! எத்தனை கிலோ கஞ்சா தெரியுமா?
ganja packets that police set on fire kilos ganja
மதுரையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காவலர்கள் 806 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் நீதிமன்ற விசாரணைக்கு பிறகு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள பொத்தையடியில் இருக்கக்கூடிய பயோமெட்ரிக் ஆலையில் காவலர்கள் தீயிட்டு அழித்தனர்.

இதனை முன்னிட்டு, அந்த ஆலைக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.மேலும் 806 கஞ்சா பொட்டலங்களை தீயில் எரித்தனர்.இது குறித்து அதிகாரிகள், இன்னும் தமிழகத்தில் பதுக்கி இருக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை வெளியில் கொண்டு வந்து தீயில் எரிக்க காத்துகொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
ganja packets that police set on fire kilos ganja