#தேனி || யார கேட்டு ஊருக்குள்ள வந்த.? போலீசை வெட்ட முயன்ற கஞ்சா குடிக்கிகள்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தேனி மவட்டம் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் அவரது நண்பர் காமராஜ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜர் ஆகியோர் கஞ்சா போதையில் பிரபாகரன் வீட்டிற்கு சென்று அவர் இல்லாத நிலையில் வீட்டு முன் நின்று ஆபாசமாக பேசியதோடு தரக்குறைவாக நடந்துள்ளனர்.

இருவரும் கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் பிரபாகரனின் தங்கையிடம் கத்தியை காட்டி மிரட்டியதோடு, வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

இதனால் பயந்து போன பிரபாகரனின் தங்கை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.  அடுத்த சில நிமிடங்களில் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக போலீசார் ஊருக்குள் வந்துள்ளனர்.

அப்போது கஞ்சா போதை தலைக்கேறிய நிலையில் இருந்த தீபக் ரவிச்சந்திரன் மற்றும் காமராஜர் காவல்துறையினரை தடுத்து நிறுத்தியதோடு எங்கள் ஊருக்கும் நீங்க எப்படி வரலாம்.. யாரிடம் அனுமதி வாங்கினீர்கள்... எங்க பஞ்சாயத்தில் அனுமதி வாங்கணும்.. என தரக்குறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாதியை பற்றி பேசியதாக கேஸ் போடவும்.. யார் கிட்ட வேணாலும் வீடியோவை காட்டிக்க என காவலர்களை மிரட்டியதோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் பைக்கில் வைத்திருந்த கத்தியை எடுத்து விசாரணைக்குச் சென்ற காவலர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்க முற்பட்டுள்ளனர்.

இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் கஞ்சா குடிக்கிகள் இருவரையும் பிடித்து நிறுத்தியதோடு போலீசாரை செல்லுமாறும் கெஞ்சும் காட்சிகள் காவலர் வீடியோவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதனை அடுத்து தென்கரை காவல்நிலைய ஆய்வாளர் ஜோதி பாபு தலைமையிலான போலீசார் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட தீபக் ரவிச்சந்திரனை கைது செய்தனர். இதை கண்ட காமராஜ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

காமராஜை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போதையில் காவல்துறையினரையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால் சாதாரண பொதுமக்களின் நிலையை யோசித்து பாருங்கள். முதல்வர் சொன்ன தமிழகம் அமைதி பூங்கா இதுதானா.? என நெடிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ganja intoxicated people trying attack policeman video going viral


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->