இதை அழித்தால் தான், தமிழக இளைஞர்களையும், மக்களையும் பாதுகாக்க முடியும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து! - Seithipunal
Seithipunal


கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தால் தான், தமிழக இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பாதுகாக்க முடியும் என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் போதைக்கு அடிமையானவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இதனை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார். 

வழக்கின் விவரமும், பின்னணியும்: 

கடந்த 2016 ஆம் ஆண்டு கஞ்சா கடத்தல் வழக்கில் விசாரணை நீதிமன்றம் கணேசன் என்பவருக்கு பத்தாண்டு கால சிறை தண்டனை விதித்தது.

இந்த நிலையில், இந்த சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கணேசன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு என்று நீதிபதி கேகே ராமகிருஷ்ணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தால் தான், தமிழக இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பாதுகாக்க முடியும்.

கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று தமிழக அரசுக்கு சில கருத்துக்களை தெரிவித்த நீதிபதி, கணேசனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டனையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ganja case thanjai Ganesan Chennai HC Division Madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->