2009-ஆம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை சூட்டாத காங்கிரஸ் இப்போது ஏன் குதிக்கிறது..? பாஜ தாக்கு..!
The BJP says that the Congress did not name any scheme after Gandhi until 2009
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது சட்டமாகியுள்ளது. விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தின்படி, 100 நாட்கள் வேலைதிட்டம், 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும்.
ஆனாலும், இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டதாகவும் புகார் கூறிவருகின்றனர். இதனையடுத்து, காங்கிரஸ் எம்பி சோனியா, நாடு தழுவிய போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009-ஆம் ஆண்டு வரையில் எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை ஏன் வைக்கவில்லை என்று பாஜ எம்பி அனுராக் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அவர் இது குறித்து பேசியதாவது; பொய்க்கு மறுபெயர் தான் காங்கிரஸ். ஏனெனில், அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம், நாட்டு மக்களை தவறான பாதையில் வழி நடத்துகிறார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்து போதும் கூட, 2009-ஆம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் மகாத்மா காந்தியின் பெயரை வைக்கவில்லை. அதன்பிறகு தான், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
The BJP says that the Congress did not name any scheme after Gandhi until 2009