'ஆர்எஸ்எஸ் பணிகள் வெளிப்படையானவை: முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல'; மோகன் பகவத்..! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அமைப்பின் பணி வெளிப்படையானது. எப்போது வேண்டுமானாலும் மக்கள் அதனை பார்க்கலாம்  என கோல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்கு பேசுகையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: தற்போது மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியை மீண்டும் கட்டப்போகிறோம் என அடிக்கல் நாட்டி பிரச்சினையை மீண்டும் எழுப்ப அரசியல் சதி நடக்கிறதாகவும், இது ஓட்டுக்காக இது நடக்கிறது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள் நலனுக்காக நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோவில்கள் அல்லது வழிபாட்டு தலங்களை அரசு கட்டக்கூடாது. அது தான் சட்ட விதி என்றும், சோமநாதர் கோவில் கட்டப்பட்ட போது நாட்டின் உள்துறை அமைச்சராக சர்தர் வல்லபாய் படேல் இருந்தார். அக்கோவில் கும்பாபிஷேக விழாவில் அன்றைய ஜனாதிபதி பங்கேற்றார். ஆனால், அரசுப் பணம் ஏதும் செலவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ராமர் கோயில் கட்டப்பட்டதாகவும், இதற்காக அறக்கட்டளை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டது. அரசும் அதனை செய்தது. ஆனால், அரசு சார்பில் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு நாம் தான் பங்களித்தோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையான தேச பக்தர்கள் நாங்கள். 'முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்' என்ற ஒரு கருத்து இருக்கிறது என்று குறிப்பி அவர்,  தான் முன்பு சொன்னது போல் ஆர்எஸ்எஸ் பணிகள் வெளிப்படையானவை. எப்போது வேண்டுமானாலும் வந்து , பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி வந்து பார்த்த மக்கள், எங்களை உண்மையான தேசபக்தர்கள் என சொல்கின்றதாகவும், நீங்கள் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கின்றீர்கள். ஹிந்துக்களின் பாதுகாப்புக்காக பேசுகிறீர்கள். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என சொல்கின்றனர். பலரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

இந்துஸ்தான் என்பது ஹிந்து நாடு என்றும், இந்தியாவை தங்கள் தாய் நாடாக யார் கருதுகிறார்களோ அவர்கள் இந்தியப் பண்பாட்டை போற்றுகிறார்கள் என்றும் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்துஸ்தான் மண்ணில் இந்திய முன்னோர்களின் பெருமையை நம்பிப் போற்றும் ஒரே ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் வரை இந்தியா ஒரு ஹிந்துதேசம் தான். இது தான் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒரு வேளை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி அந்த வார்த்தையை சேர்க்க பாராளுமன்றம் முடிவு செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி பரவாயில்லை. அந்த வார்த்தையை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் நாங்கள் ஹிந்துக்கள். எங்கள் தேசம் ஒரு ஹிந்து தேசம். அது தான் உண்மை என்று பேசியுள்ளார்.

மேலும், நாம் மக்கள் தொகையை திறம்பட நிர்வகிக்கவில்லை என்றால், மக்கள்தொகை ஒரு சுமைதான் என்றும், ஆனால், அது ஒரு சொத்தும் கூட  என்று குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டின் சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, வசதிகள்,பெண்களின் நிலை, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் தேவை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு 50 ஆண்டு காலத் திட்டத்தின் அடிப்படையில் நாம் ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என்று மோகன் பகவத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mohan Bhagwat says that the RSSs activities are transparent


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->