'தேர்தல் கூட்டணி கிடையாது. சாப்பாட்டில் மட்டும்'தான் கூட்டு, பொரியல் எல்லாம்'; சீமான் பேச்சு..!
Seeman stated in Trichy that there will be no electoral alliance
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மற்றும் மாநில கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. இதை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:
பெண்களுக்கான விடுதலை, உரிமை ஆகியவற்றை போராடித்தான் பெற வேண்டும் என்றும், அதற்கான களமே அரசியல். அதனால்தான், சட்டசபை தேர்தலில், சரி பாதியாக 117 இடங்களை, பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி வழங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், போட்டியிட, தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லையே என, வருத்தம் இருக்கலாம். ஆனால், களத்தில் உள்ள சிக்கலை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பெரும்பான்மை சமூகத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும் வேண்டும், அவ்வாறு கொடுக்காமல் விட்டால், விமர்சனங்கள் எழும் எனவும், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களும் உள்ளன. அவர்களுக்கும், நாம் வாய்ப்பு வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜாதி, நிறம், மதம் பார்த்து, யாரும் ஓட்டு போடக் கூடாது எனவும், ஜாதியாக நின்று, இங்கு யாரும் வென்றதில்லை. எந்த சமூகத்துடன், மற்ற சமூகம் இணைகிறதோ, அப்போதுதான் வெற்றி கிடைக்கும் என்று சீமான் பேசியுள்ளார்.

மக்களுக்கு நம் அரசியல் புரியும்போது, நம்மை அவர்கள் கொண்டாடுவர். எனவே, நம்மை நோக்கி வரும் விமர்சனங்களை, புறம் தள்ள வேண்டியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும், 234 வேட்பாளர்களையும், வரும் பிப்ரவரி 21இல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அறிவிக்கவுள்ளதாகவும், அதில் அனைவரும் இளைஞர்கள்தான் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலில் சமரசம் இல்லை. தேர்தல் கூட்டணி கிடையாது. சாப்பாட்டில் மட்டும்தான் கூட்டு, பொரியல் எல்லாம். சண்டை எல்லாம் தனித்துதான் போடுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman stated in Trichy that there will be no electoral alliance