சென்னையில் ரூ.500 கள்ளநோட்டு புழக்கமா..? திருவொற்றியூர், எண்ணூரில் பழ வியாபாரிகளை ஏமாற்றிய கும்பல்..1 - Seithipunal
Seithipunal


சென்னை திருவொற்றியூர், எண்ணூர் மார்க்கெட் பகுதிகளில்  சாலையோரம் கடை நடத்திவரும் பெண்கள் மற்றும் மூதாட்டிகளை குறிவைத்து ஒரு கும்பல் பொருட்கள் வாங்குவது போல் 500 ரூபாய் கள்ள நோட்டை புழக்கத்தில் விடுத்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, எண்ணூர் தாழங்குப்பம் பஜார் பகுதியில் சாலையோரம் பழ வியாபாரம் செய்து வரும் குமாரி என்பவரிடம் நேற்று காலை 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டு மீதி சில்லறையும் பெற்றுச் சென்றுள்ளனர். இதன்பிறகு குமாரி அந்த நோட்டை சக வியாபாரியிடம் கொடுத்த போது அது கள்ள நோட்டு என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், குமாரியிடம் விசாரணை நடத்தியதோடு, பின்னர் அந்த கள்ள நோட்டை வாங்கி பரிசோதனை செய்துள்ளனர். அந்த நோட்டை யார் கொடுத்திருப்பார்கள் என்பது குறித்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவொற்றியூர் மார்க்கெட்டில் ஜெயலட்சுமி என்ற மூதாட்டியிடம் போலி 500 ரூபாய் நோட்டு கொடுத்து பழங்கள் வாங்கி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gang Cheats Fruit Vendors in Chennais Thiruvottiyur and Ennore Using Fake rs500 Notes


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->