உளவுப் பிரிவில் முக்கிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!
Tamil Nadu Government Orders Transfer of Key Officials in Intelligence Wing
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு உளவுப்பிரிவில் உள்ள 10 முக்கிய அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, உளவுத்துறை டிஜிபியாக இருந்த பாலநாகதேவி சைபர் கிரைம் டிஜிபியாகவும், வேலூர் சரக டிஐஜி தர்மராஜன், பாதுகாப்பு உளவுப்பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்து, சென்னை மாநகர காவல்துறையின் தென்மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பாகர்லா செபாஸ் கல்யாண் உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை டிஐஜியாகவும், திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன், உளவுப்பிரிவு டிஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், திருவாரூர் எஸ்.பி. கரத் கருண் உத்தாவ்ராவ்-ஐ திட்டமிட்ட குற்றத்தடுப்பு காவல் துறை உளவுப் பிரிவு எஸ்.பி.யாகவும், தென்காசி எஸ்.பி. மயில்வாகனனை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.யாகவும் நியமித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.யாகவும் கியூ பிராஞ்ச் சிஐடி எஸ்.பி. சண்முகம், சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.யாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்ததாக, மெட்ரோ மண்டல குற்றப்பிரிவு சிஐடி எஸ்.பி. ஜி.எஸ். மாதவன் பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.யாகவும், சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி என்.சிலம்பரசன் சிறப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.யாகவும் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tamil Nadu Government Orders Transfer of Key Officials in Intelligence Wing