திலக் வர்மாவின் அதிரடி; பஞ்சாப்பை 06 விக்கெட்டுகளால் வீழ்த்திய மும்பை அணி..! - Seithipunal
Seithipunal


19-வது ஐபிஎல் போட்டியின் 58-வது லீக் ஆட்டம் இன்று தர்மசாலாவில் நடைபெறத்து. இதில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின. மும்பை அணிக்கு இன்று பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற முன்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணி, 08 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது.

அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 57 ரன்களை எடுத்தார். ப்ரியான்ஸ் ஆர்யா 22, கூப்பர் காணொலி 21, அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் 38 என சிறப்பான தொடக்கம் தொடுத்து ஆட்மிழந்தனர்.

மும்பை அணி சார்பில் ஷர்துல் தாகூர் 04 விக்கெட்டினையும், தீபக் சாகர் 02 விக்கெட்டினையும், ராஜ் பாவா, பாஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 201 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 06 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 75 ரன்களும், ரிக்கல்டன் 48 ரன்களும் எடுத்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் அஸ்மதுல்லாஹ் ஓமர்சாய் 02 விக்கெட்டினையும் மார்கோ ஜான்சன், சாகல் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai Defeats Punjab by 6 Wickets


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->