கசக்கிப் பிழிந்து கடன் வசூலிக்கும் நிறுவனங்கள் - கஜா புயல் சோகத்திலும் அரங்கேறி வரும் அராஜகம்..? கண்ணீர் விடும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


பொதுமக்களை கசக்கிப் பிழிந்து கடன் வசூல் செய்யும்நுண்கடன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்,

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர். அதில் 'கஜா புயலின் கோர தாண்டவத்தால், சாதாரண மக்கள்வீடு, வாசல்களை, உடமைகளை இழந்து, தினம், தினம் எந்தவருமானமோ, வேலை வாய்ப்போ இன்றி நிவாரணத்திற்காக குறிப்பாக உணவு, உடை, குடிதண்ணீருக்கு கூட வீதிக்கு வந்துகையேந்தும் அவலநிலை உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிராம விடியல் நிறுவனம்,ஆர்.பி.எல்., எல்என்டி., கிராம சக்தி, கிராமின் கூட்டா, புது ஆறு, பின்கார், ஷேர் நிறுவனம், முத்தூட் பைனான்ஸ், ஆசீர்வாதம் உள்ளிட்ட நுண்கடன் நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்துகுழு கடன் நிறுவனங்கள் மூலம் ஏழை, எளிய மக்கள் வாங்கியுள்ள கடன்களை உடனடியாக திருப்பி செலுத்திட வேண்டுமென மிரட்டல், ஏகவசனமாக கொடுஞ்சொற்களால் ஏசுவது போன்ற மனிதாபிமானமற்ற முறையில் பாடுபடுத்துவது, பொதுமக்களை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயலாகும்.

எனவே தனியார் நுண்நிதி நிறுவனங்களின் இத்தகைய அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்கள் திருப்பிச்செலுத்தும் சக்தி வரும் வரை, கடன் வசூலை குறைந்த பட்சம் ஒரு வருட காலமாவது தள்ளிப் போட, உரிய நடவடிக்கைகளை உடன் எடுத்திடுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இது போன்ற நிறுவனங்கள் மக்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது' என்று அந்த  மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gaja cyclone finance concern forced


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->