இன்றுமுதல் இணையத்தில் குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்!
From today onwards you can obtain the hall ticket for Group 1 exam online
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.மேலும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுரைகளை வழங்குவதுடன் தேர்வு தேதி ,நடைபெறும் இடம் போன்ற தேர்வு நெறிமுறைகளை தேர்வாணையம் வழங்கிவருகிறது.
அந்தவகையில் , குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
From today onwards you can obtain the hall ticket for Group 1 exam online