கத்தி தாக்குதல் முதல் துப்பாக்கிச்சூடு வரை...! - அதிகாரிகளை கத்தியால் மிரட்டிய நவீன் மருத்துவமனையில்..! நடந்து என்ன...?
From knife attack shooting Naveen threatened officers knife hospital What happened
கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வல்லம்படுகையைச் சேர்ந்த 25 வயதான நவீன், கஞ்சா கடத்தல் கோர்வையில் முக்கிய சந்தேக நபராக நீண்டநாளாக போலீசாரின் ரேடாரில் இருந்தவர். 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை, நேற்று சிறப்பு கண்காணிப்புப் படையினர் இறுதியாக கைது செய்தனர்.

பின்னர், பதுக்கி வைத்திருந்த போதைப்பொருள்களை மீட்க நவீனை அண்ணாமலைநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றபோது, திடீரென சூழல் பரபரப்பாக மாறியது. தப்பிச் செல்லும் நோக்கில் நவீன் கத்தியை எடுத்து அதிகாரிகளை நோக்கி சரமாரியாக தாக்கினார்.
இந்த திடீர் தாக்குதலால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.நேரத்தை வீணாக்காமல் சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, நவீனின் கால்முட்டியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். குண்டு பட்டு தரையில் விழுந்த நவீன் வலியால் படபடவென அலறினார்.
உடனடியாக அவரை போலீசார் தூக்கிச் சென்று கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். நவீனின் தாக்குதலில் காயமடைந்த காவலர் ஐயப்பனும் அதே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
English Summary
From knife attack shooting Naveen threatened officers knife hospital What happened