இரும்பு பாதுகாப்பு...காஞ்சீபுரம் கூட்டத்தில் QR நுழைவு சீட்டு கட்டாயம்..! - 1 கிமீ சுற்றுவட்டாரத்தில் கடும் கண்காணிப்பு
Iron security QR entry pass mandatory Kancheepuram gathering Strict surveillance within 1 km radius
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தயாரிப்பில் த.வெ.க. அலை முன்பெப்போதுமில்லாத தீவிரத்துடன் இறங்கியுள்ளது. கரூர் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் மக்கள் நேர்முக சந்திப்புகளைத் தொடங்க விஜய் திட்டமிட்டிருந்தாலும், சேலம் பயணத்திற்கு அனுமதி சிக்கல் ஏற்பட்டதால் அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி வளாக உள் அரங்கில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு விஜய் தலைமையேற்கிறார்.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் கலந்துகொள்கிறார்கள்.காஞ்சீபுரம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 2,000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
அவர்களுக்காக தனிப்பட்ட ‘கியூஆர் கோடு’ கொண்ட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. “நுழைவுச் சீட்டு இன்றி ஒருவருக்கும் அனுமதி இல்லை” என்று த.வெ.க. தெளிவாக அறிவித்துள்ளது.
விஜய்யை காண கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் வகையில் தகரத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 1 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் யாரும் அனுமதியின்றி நுழையாதபடி தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
Iron security QR entry pass mandatory Kancheepuram gathering Strict surveillance within 1 km radius