மீனாட்சி கோவிலில் அதிரடி! அய்யப்ப பக்தர்களை ஏமாற்றிய போலி வழிகாட்டிகள் மூவர் கைது...! - Seithipunal
Seithipunal


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து திரளாக வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகம் அதிகாரப்பூர்வ வழிகாட்டிகளை நியமித்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த 39 அய்யப்ப பக்தர்களை குறிவைத்து, 3 பேர் தங்களை கோவில் அங்கீகரித்த வழிகாட்டிகள் என அள்ளிப்பழித்து அணுகினர்.

“ஒருவருக்கு ரூ.250 கொடுத்தால் விரைவில் சாமி தரிசனம் செய்து விடுவோம்” என வாக்குறுதி அளித்த அவர்கள், மொத்தமாக ₹9,750ஐ வசூல் செய்து, சாதாரண ₹50 டிக்கெட் மூலம் உள்ளே செல்லுமாறு அனுப்பினர்.

இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததும், அய்யப்ப பக்தர்களும் அந்த போலி வழிகாட்டிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்து தலையிட்ட கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், அவர்களிடம் விளக்கம் கேட்க முயன்றார்.

ஆனால் அந்த மூவரும் அவர்மீது தகாத வார்த்தைகளில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.உடனடியாக சோமசுந்தரம் மீனாட்சி கோவில் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விரைவாக விசாரணை நடத்தி,வெங்கடேஷ் (46) – சிம்மக்கல் கிருஷ்ணஅய்யங்கார் தோப்பு,அம்மையப்பன் (42) – வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசல்,கணேசன் (47) – வில்லாபுரம் தென்றல்நகர், என மூவரையும் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action Meenakshi Temple Three fake guides arrested deceiving Ayyappa devotees


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->