இலவசம்: தமிழகத்தில் இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வாய்ப்பு!
free LPG gas Cylinder Central Govt
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்து வருகின்றன. இதனை மேலும் பலருக்கு சென்றடைய செய்வதற்காக, 2016 மே 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர் மற்றும் முதல் சிலிண்டருக்கான செலவினை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், தொடர்ந்து சிலிண்டர் வாங்கும்போது மானியமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் இதுவரை 40 லட்சம் பேருக்கு இந்த திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, நாடு முழுவதும் 25 லட்சம் புதிய இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 10 சதவீதம், அதாவது சுமார் 2.5 லட்சம் இணைப்புகள் தமிழகத்துக்கே வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்த தகவலின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக புதிய இணைப்புகளின் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. நகரமயமாக்கல் அதிகமாக உள்ள தமிழகத்தில் தேவைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்ப கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
free LPG gas Cylinder Central Govt