என்ன அனைவருக்கும் இலவசமாக ஏ.சி. வழங்கும் திட்டமா? தமிழக அரசு கொடுத்த விளக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாகத் தாக்கி வருகிறது. வெயிலின் தாக்கத்தில், மக்கள் அதிகம் நேரம் வீட்டிலும் அலுவலகங்களிலும் தஞ்சம் புகுந்து இருக்கின்றனர். வெளியே செல்லும் போது மர நிழல், மேம்பாலம், பஸ் நிறுத்தம் போன்ற இடங்களில் தங்கியிருந்து வெயிலின் தாக்கத்தை தவிர்க்க முயல்கிறார்கள். வீடுகளில் வெப்பத்தைக் குறைக்க மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்க, இடைக்கிடையே ஏற்படும் மின்வெட்டும் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

இந்த சூழலில், “மத்திய அரசு கோடைகால வெப்பத்தைத் தணிக்க இலவச 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது; இதற்கு மாநில அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்” என்ற தலைப்புடன் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுபற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தகவல் சரிபார்ப்பு மற்றும் பொய்யான செய்திகளை முற்றுப்படுத்தும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கில், “அந்த வீடியோ தகவல் முற்றிலும் தவறானது. மத்திய அரசு இத்தகைய எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது ஒரு வதந்தி என்பதை மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Free AC for all home fake news alert TNgovt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->