பாலியல் உணர்வுகளை தூண்டும் போலி மருந்துகள்: கால் சென்டர் மூலம் மோசடி..! - Seithipunal
Seithipunal


டெல்லி அருகே பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் என போலி மாத்திரைகளை விற்ற கும்பல் சிக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கான் உத்தியோபிகர் பேச் 05 உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தடத்தில் இருந்து ஒரு கால் சென்டர் செயல் பட்டு வந்துள்ளது. இந்த கால் சென்டரில் இருந்து பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரை மருந்துகள் விற்பதாக குர்கான் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில், பியூஸ் குமார் என்பவர் இந்த கால் சென்டரை நடத்தி வந்ததுள்ளமை தெரிய வந்துள்ளது.  அதில் மூன்று பெண்கள் உட்பட பத்து பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கும்பல் இன்ஸ்டா, பேஸ்புக் மூலம் பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரை உள்ளதாக விளம்பரம் கொடுத்துள்ளது. அதை பார்த்த ஆர்வம் உள்ளவர்கள் கிளிக் செய்தால் அதில் ஒரு கூகுள்போர்ம் இணைக்க பட்டிருக்கும் அதில் விவரங்களை பதிவு செய்து வருபவர்களுக்கு இந்த கால் சென்டரில் இருந்து பேசி மாத்திரை மருந்துகள் விற்பனை செய்துள்ளனர்.

இதனை நம்பி, பல ஆயிரம் கொடுத்து மருந்துகளை வாங்கியவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், பலன் இல்லை என்பதால் இதனால் ஒன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த கும்பல் குறித்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவர்கள் வெளியில் இருந்து 50 ,100 ரூபாய்க்கு கெல்சிம், வைட்டமின் மருந்து மாத்திரைகளை வாங்கி நவின பேக்கில் அடைத்து பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்துகள் என பலாயரத்துக்கு விற்றுள்ளனர். இதனை கால் சென்டரில் இருந்து மூன்று பெண்களும் போன் செய்து மூளை சிலவுகளை செய்து மருந்துகளை விற்பனை செய்துள்ளனர். 

அத்துடன், குறித்த கால் சென்டரில் பணியாற்றிய பத்து பேருக்கும் 15,000 முதல் 20,000 ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும், அதிகம் மருந்துகள் விற்பனை செய்பவர்களுக்கு கமிஷன் இன்சென்டிவ் என பியூஸ் குமார் கொடுத்ததும் அம்பலமாகியுள்ளது.

இதையடுத்து மோசடி கும்பலை கைதுசெய்த குர்கான் போலீசார் அவர்களிடம் இருந்து 13 மொபைல் போன்கள் 54 போலி பாலியல் மேம்பாட்டு கேப்ஸுல்கள் கொண்ட பெட்டிகள் மற்றும் 35 சிறிய என்னை ஸ்ப்ரே பாட்டில்கள் ஆகியவை மீட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraudulent call center selling fake sexual arousal drugs


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->