வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம்: எதிராக கேரளா சட்ட பேரவையில் தீர்மானம்..!
Kerala Legislative Assembly passes resolution against radical voter special reform
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கேரளாவில் விரைவில் வெளியாகவுள்ளது. இது தொடர்பில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி திரு உ. கேல்கர் தலைமையில் கடந்த 20 ஆம் தேதி அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியும் எதிர் கட்சியான காங்கிரஸ் தலைமையில்லான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

இதில், சிறப்பு தீவிர திருத்துத்துக்கான ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் அட்டையை சேர்ப்பதுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரையில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்கும்மாறும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை சிறப்பு தீவிர திருத்ததை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திரு.கேல்கர் பரிந்துரைத்துள்ளார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை அதற்கு பதில் அளிக்க வில்லை. இந்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இதன் போது வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கோள்வது தவறான செயல் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 -ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல என அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது.
English Summary
Kerala Legislative Assembly passes resolution against radical voter special reform