கரூர் துயரத்திற்கு செந்தில்பாலாஜி தான் காரணம்... தவெக நிர்வாகி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை!
Karur Stampede tvk vijay dmk senthilbalaji
கரூரில் நடந்த துயரச்சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்குப் பின்னணி காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே இருப்பதாக குற்றம் சாட்டி, த.வெ.க கிளை செயலாளர் ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக் கடிதத்தில், விஜய் கரூர் வருகையின்போது போதிய காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும், விஜய் ரசிகர்கள் சிறப்பாக பணியாற்றினாலும், செந்தில் பாலாஜி பல்வேறு அழுத்தங்கள் மற்றும் புதுமையான முறைகளால் நெருக்கடி ஏற்படுத்தியதால் இந்த பெரும் துயரம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் காவல்துறையும் பங்காற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன், செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Karur Stampede tvk vijay dmk senthilbalaji