விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள 14 சுங்கத் சாவடிகள் அகற்றப்படும் - அமைச்சர் எ.வ.வேலு.! - Seithipunal
Seithipunal


விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள 14 சுங்கத் சாவடிகள் அகற்றம் - அமைச்சர் எ.வ.வேலு.!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “வருகிற 2024 மே மாதம் 31ம் தேதிக்குள் இந்த சட்டக்கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடையும். மழைகாலத்தில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மாவட்டங்களில் எல்லாம் சாலைகள் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்து  வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். 

அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள 14 சுங்கச்சாவடிகளை விரைவில் அகற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். அதேபோல், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நானும் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியுள்ளேன்.

சுங்கத் சாவடியை அகற்றுவதற்கான இறுதி முடிவை மத்திய அரசே எடுக்கும். மேலும், மாநில அரசு இருவழிச் சாலைகள் மட்டுமே அமைத்து வந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நான்கு வழிச் சாலை அமைக்க உள்ளது” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fourteen toll booths remove for break the rules in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->