கூகுள் பே பயனர்கள் எதிர்பார்த்த அப்டேட் வந்தாச்சு! ரூ.100-க்கு குறைவான UPIகளில் பணம் அனுப்புறீங்களா? வருகிறது புதிய ரூல்ஸ்.. வங்கிகள் எடுத்த முடிவு - Seithipunal
Seithipunal


வங்கித் துறையில் முக்கியமான மாற்றம் ஒன்று அமலுக்கு வர உள்ளது. ரூ.100-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு SMS அறிவிப்புகளை அனுப்புவதை நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் அனுமதி கோரியுள்ளன.

கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், தினசரி பல சிறிய பரிவர்த்தனைகளுக்கான SMSகள் வாடிக்கையாளர்களை சோர்வடையச் செய்கின்றன. ₹10 அல்லது ₹20 போன்ற சிறிய தொகைகளுக்கான மெசேஜ்கள் பெருமளவில் வருவதால், முக்கியமான பரிவர்த்தனை அறிவிப்புகள் தவறவிடப்படுகின்றன என வங்கிகள் கூறியுள்ளன.

இதையடுத்து, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து RBIயிடம் இந்த கோரிக்கையை சமர்ப்பித்துள்ளன. சிறிய பரிவர்த்தனைகள் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது எண்ணிக்கையை மீறினால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு SMS அனுப்பப்படும் வகையில் புதிய முறை செயல்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், வாடிக்கையாளர்கள் விரும்பினால் வங்கி செயலிகள் அல்லது மின்னஞ்சல் மூலமாக இந்தச் சிறிய பரிவர்த்தனை அறிவிப்புகளைப் பெறலாம். SMS அனுப்புவதற்கு வங்கிகளுக்கு சுமார் 20 பைசா செலவாகும். சில வங்கிகள் இதனைத் தாங்களாகவே ஏற்று வருகின்றன, மற்றவை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன.

மின்னஞ்சல் அறிவிப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தி, உண்மையான பயன்பாட்டிற்கே கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக, வீட்டு கடன்கள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெரிய அளவிலான கடன்கள் மற்றும் IPO முதலீடு தொடர்பான விதிகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு நிறுவனத்திற்கு 20% வரை, ஒரு குழுமத்திற்கு 25% வரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பங்குகளை அடமானம் வைத்து வழங்கப்படும் கடன்களின் உச்ச வரம்பு ₹20 லட்சத்தில் இருந்து ₹1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. IPO நிதி வரம்பும் ₹10 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கித் துறையில் இந்த புதிய மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், வாடிக்கையாளர்கள் தேவையற்ற SMSகளிலிருந்து விடுபடுவார்கள். அதேசமயம், தொழில்நுட்ப திறன் மேம்படவும், பரிவர்த்தனை பாதுகாப்பு உறுதியாகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Google Pay users much awaited update has arrived Are you sending money under Rs100 through UPI New rules are coming Banks decision


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->