பெண்கள் அழகை ஆராதிக்க பிறந்தவன் நான்., 4 பொண்டாட்டி  காரன் சிங்காரத்தை சிறையில் அடிக்குமா காவல்துறை.! - Seithipunal
Seithipunal


ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணமானதை மறைத்து, நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட கயவனை போலீசார் கைது செய்ய வேண்டும் என்று, முதல் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. இவருக்கு வயது 28 ஆகின்றது. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருக்கும் திருப்பூரில் டைலர் ஆக பணிபுரிந்து வந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த சிங்காரம் (வயது 29) என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக சந்தியாவை சிங்காரம் தனது சொந்த ஊரான தருமபுரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, சந்தியாவை பார்க்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து சந்தியா விசாரணை செய்ததில், வேறு ஒரு நிறுவனத்தில் பணிக்கு சென்ற சிங்காரம் அங்கு பணிபுரிந்த கஸ்தூரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கஸ்தூரி திடீரென இறந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து உள்ளார். ஏற்கனவே மூன்று பெண்களுடன் திருமணமானதை மறைத்து, நான்காவதாக கோவையை சேர்ந்த லட்சுமி என்பவரையும் சிங்காரம் திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து சிங்கார தேடி கோவை சென்ற சந்தியா, அவர்களை தேடிப்பிடித்து தனது கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சிங்காரம், 'நான் அப்படித்தான் இருப்பேன்., நான் பெண்களின் அழகை ஆராதிக்க பிறந்தவன்" என்று சந்தியாவிற்கு பதில் கொடுத்துள்ளார்.

மேலும், சந்தியாவை சிங்காரத்தின் மூன்றாவது, நான்காவது மனைவிகள் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சந்தியா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அவரின் அந்த மனுவில் எனது கணவர் சிங்காரத்தை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்., இல்லை என்றால் என்னுடைய இரண்டு குழந்தைகளுடன் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று சந்தியா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சந்தியா தெரிவிக்கையில், "இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டதால் என்னிடம் அழகு இல்லை என்று சிங்காரம் என்னுடன் வாழ மறுத்துவிட்டார்.

இதனை தட்டி கேட்டபோது என்னையும் எனது குழந்தைகளையும் தற்கொலை செய்துக் கொள்ளுங்கள்., இல்லை என்றால் உங்களை நானே கொலை செய்துவிட்டு ஆறு மாதங்கள் சிறை சென்று விடுவேன். அதன் பிறகு வெளியே வந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து நான் சந்தோஷமாக இருப்பேன்., என்று என்னை மிரட்டினார்.

எனது வாழ்க்கை சீரழிந்தது போல் மற்ற பெண்களின் வாழ்க்கையும் எனது கணவர் சிங்காரம் சீரழித்து விடுவார். எனவே, அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் சந்தியா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four wife sinkaram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->