சிவகாசியில் மரண ஓலம்.. பெண் உட்பட 4 பேர் பலி.. வெடித்து சிதறிய பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது பட்டாசு வெடித்து சிதறியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் சற்று முன்னர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பெண் உட்பட 4 பேர் சிக்கி உயிரிழந்துள்ளனர். 

வழக்கம்போல் இன்று பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தபோது உராய்வு காரணமாக ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் உராய்வின்போது வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four people died in firecrack accident in Sivakasi


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->