முன்னாள் முதலமைச்சர் ப.சண்முகம் பிறந்த தினம் இன்று!
Former Puducherry Chief Minister P. Shanmugam Birthday Today
புதுச்சேரியின் 'பீஷ்மர்' முன்னாள் முதலமைச்சர்.திரு.ப.சண்முகம், Ex.M.P., அவர்கள் பிறந்ததினம்!.
ப.சண்முகம் (P. Shanmugam, மார்ச் 25, 1927 - பிப்ரவரி 2, 2013) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினரும், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.
முன்னாள் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இப்படி பல பரிமாணங்கள் கொண்ட தலைவர் ப.சண்முகம். புதுச்சேரி அரசியலில் கடந்த 50 வருட அரசியலில் கல்வெட்டாய் திகழ்கிற புகழுக்கு சொந்தக்காரர். அரசியல் அறிவு, சமயோசிதம், தொலைநோக்கு சிந்தனை, துரித முடிவுகள் என அனைத்தும் வலிவானவை.
இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு, மக்களவை உறுப்பினராக புதுச்சேரி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இவர் 2000 முதல் 2001வரை புதுச்சேரியின் 10 வது மற்றும் 11 வது முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார்.
English Summary
Former Puducherry Chief Minister P. Shanmugam Birthday Today