முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்..அரசியல் தலைவர்கள் மரியாதை!
Former Prime Minister Rajiv Gandhis memorial day Political leaders pay their respects
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி அவருக்கு நாடு முழுவதும் தலைவர்கள் மரியாதை செலுத்திவருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த ராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் வன்முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை அரசு செயலர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் " வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி" யினை ஏற்று கொண்டார்கள். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆட்சியருடன் உறுதிமொழியினை ஏற்று கொண்டார்கள்.

English Summary
Former Prime Minister Rajiv Gandhis memorial day Political leaders pay their respects