"தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது?": தவெக அரசுக்குப் பதிலடி கொடுத்துத் திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தொடர்ந்து 3 மாதங்களாக ஜிஎஸ்டி (GST) வரி வசூல் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், உண்மையான பொருளாதார நிலையை மறைத்துத் தவெக அரசு போலி கணக்குகளைக் காட்டி வருவதாகத் திமுக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்நாட்டு பொருளாதாரம் மந்தம்: ஒரு மாநிலத்தில் வசூலிக்கப்படும் மொத்த ஜிஎஸ்டி என்பது அதன் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் பிரதிபலிப்பாகும். மாநிலத்திற்குள் நடைபெறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் பரிவர்த்தனை தொடர்ந்து குறைவது உள்நாட்டுப் பொருளாதாரத் தேக்கநிலையைக் காட்டுகிறது.

17% உயர்வு கணக்கு திசைதிருப்பல்: வரி விகிதக் குறைப்புக்குப் பிறகும் சரிவு தொடரும் சூழலில், 'Post Settlement'-க்கு பிறகு 17% உயர்வு ஏற்பட்டுள்ளது என்ற கணக்கை மட்டும் முன்வைத்து சமூக வலைதளங்களில் விடியோக்கள் மூலம் நியாயப்படுத்துவது உண்மையை மறைக்காது.

IGST ஒப்பீடு முறையல்ல: மாநிலத்திற்குள் வரி வசூல் ஏன் குறைகிறது என்பதற்குப் பதில் சொல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இறக்குமதி மூலமாகவும் பெறப்படும் IGST வருவாயைக்ாட்டுவது மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையான விளக்கம் அல்ல.

தவெக அரசுக்குக் கேள்வி: வெறும் வருவாய் எண்களை வைத்துக் கொண்டு விளையாடுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் ஏன் தொடர்ந்து தேய்ந்து வருகிறது என்பதற்கு ஆளும் தவெக அரசு முறையான விளக்கமளிக்க வேண்டும் எனத் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Minister Thangam Thennarasu Slams TVK Govt Over Declining GST Collections Economic Slowdown


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->