"இடைத்தேர்தல் 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்": தாராபுரத்தில் 37.28%, மதுராந்தகத்தில் 35.55% — நந்திகிராமில் 43.95% பதிவாகி விறுவிறுப்பு!
By-Elections 2026 Madurantakam Records 35 Dharapuram 37 WB Nandigram Hits 43
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரப்படியான வாக்குப்பதிவு சதவீத விவரங்கள் வெளியாகியுள்ளன.
மதுராந்தகம் (தனி): 35.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்குத் தவெகவின் மரகதம் குமரவேல், திமுகவின் பரந்தாமன், அதிமுகவின் கணிதா சம்பத் உட்பட 27 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தாராபுரம் (தனி): 37.28% வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்குத் தவெகவின் சத்தியபாமா, திமுகவின் சுகன்யா, அதிமுகவின் பானுமதி உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்களின் பேட்டி: வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வேட்பாளர் சத்தியபாமா, 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் பானுமதி பேசுகையில், "தாராபுரம் எப்போதும் அதிமுகவின் கோட்டை, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி நிலவரம்: முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்த தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் (அசோக் ஆனந்த்), காங்கிரஸ் (விநாயகம்), திமுக (சேதுசெல்வம்) உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு 39.16% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், 2 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க இடைத்தேர்தல் (காலை 11 மணி): மேற்கு வங்கத்தின் ரெஜிநகர் தொகுதியில் 38.71% வாக்குகளும், பலத்த எதிர்பார்ப்பிற்குரிய நந்திகிராம் தொகுதியில் 43.95% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
முடிவுகள் அறிவிப்பு: அனைத்துத் தொகுதிகளிலும் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
English Summary
By-Elections 2026 Madurantakam Records 35 Dharapuram 37 WB Nandigram Hits 43