திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய திடீர் மரணம்! சோகத்தில் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக 1996ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் குழந்தை தமிழரசன். இவர் அப்போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை எதிர்த்து வெற்றி பெற்றார். 

1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த குழந்தை தமிழரசன் தொடர்ந்து கட்சியில் முக்கிய நிர்வாகியாக விளங்கினார். மேலும் திமுகவின் கழகத் தீர்மான குழு  செயலாளராகவும் பதவி வகித்தார். கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால்  சிகிச்சை பெற்ற நிலையில் இன்று உயிரிழந்தார்.  அவருடைய மறைவு திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former DMK MLA Kulanthai Tamilarasan passed away


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->