ராட்சத அலையில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி பலி- மாமல்லபுரத்தில் சோகம்.!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள, சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வெளிநாட்டு பயணிகள் அதிகம் வருவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பரிகெட் டைலர் என்பவர், லண்டனில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் மசாஜ் தெரப்பிஸ்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன் ரூபர்ட்டைலர் என்பவருடன் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வநதுள்ளார். அங்கு இருவரும் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.

அதன் படி நேற்று இருவரும் மாமல்லபுரம் புராதன சிற்பங்களை சுற்றி பார்த்த பிறகு மாமல்லபுரம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர். அப்போது, மூதாட்டி பரிக்கெட் டைலர் திடீரென ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் தனது தாயை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. 

இதையடுத்து பரிக்கெட்டின் உடல் சுமார் ஒரு மணி நேரம் கழித்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், இங்கிலாந்து நாட்டு பெண் சுற்றுலா பயணி கடலில் மூழ்கி இறந்தது குறித்து சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இறந்த அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, தூதரகத்தின் அனுமதியுடன் இங்கிலாந்து நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foreign tourister died in mamallapuram


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->