வெளிநாட்டு ஆசை... லட்சத்தில் மோசடி...! ரூ.1 லட்சத்தை இழந்து தவிக்கும் இளம்பெண்...!
Foreign desire fraud lakhs young woman suffering from loss 1 lakh
வெளிநாட்டில் ஆசிரியர் பணியில் சேரும் கனவுடன் முயற்சி செய்து வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைத் தேடியுள்ளார்.
அப்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகக் கூறி தொடர்புகொண்ட மர்மநபர்கள், நேர்காணல் நடத்தியதுபோல் நம்பவைத்து, பின்னர் பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி நியமன ஆணையை வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விசா, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பணிநியமன நடைமுறைகளுக்காக பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, அந்த இளம்பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.1 லட்சம் வரை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பணம் செலுத்திய பின்னரும் வேலை கிடைக்காததுடன், தொடர்புகொண்ட நபர்கள் பதிலளிக்காததால் ஏமாற்றம் அடைந்த இளம்பெண் இதுகுறித்து உரிய புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, போலி வேலைவாய்ப்பு அறிவிப்பை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் நடைபெறும் இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Foreign desire fraud lakhs young woman suffering from loss 1 lakh