உணவு பாதுகாப்பு துறையின் அதிரடி நடவடிக்கை...! குடிநீர் கேன்களை 30 முறை மட்டுமே...? தரமின்றி, அனுமதியின்றி விற்பனை செய்தால்...? - Seithipunal
Seithipunal


உணவு பாதுகாப்பு துறை,'முறையான அனுமதியின்றி, தரமின்றி அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தக் கோடை வெயில் எதிரொலியின் காரணமாக கேன் வாட்டர் விற்பனை என்பது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கேன் வாட்டர் குடிநீரின் தரத்தை முழுமையாக பின்பற்றுமாறும், அடைக்கப்பட்ட குடிநீரில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும் என்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதே போல் கால்சியம் அளவை ஒரு லிட்டர் குடிநீரில் 10 முதல் 75 மில்லிகிராம் என்ற அளவிலும், மெக்னீசியத்தின் அளவை 1 லிட்டர் குடிநீரில் 5 முதல் 30 மில்லிகிராம் என்ற அளவிலும் கடைபிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் எனக் குறிப்பிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், குடிநீர் கேன்கள் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பி பயன்படுத்த வேண்டும் எனவும் கேன்களின் நிறம் மாறிடும் பட்சத்தில் மீண்டும், மீண்டும் குடிநீரை நிரப்பி விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து அவ்வாறு செய்யும் பட்சத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த எச்சரிக்கைக்கு தகுந்தவாறு நிறுவனங்கள் குடிநீர் கேன்கள் விற்பனை செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Food Safety Department Drinking water cans can only be used 30 times If they are sold without quality and permission


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->