தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் நாளை விடுமுறை..அமைச்சர்  நமச்சிவாயம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி காரைக்கால் மாகி ,ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை (03-10-2025) விடுமுறை அளிக்கப்படுகிறது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 இந்த ஆண்டு ஆயுத பூஜை நேற்று  கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று சரஸ்வதி பூஜை, தசரா, காந்தி ஜெயந்தி, கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை கொண்டாடப்படும் அக்டோபர் 1-ம் தேதியான புதன்கிழமை, அக்டோபர் 2-ம் தேதியான வியாழக்கிழமை காந்தி ஜெயந்தி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 3-ம் தேதியான வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டால் சனி, ஞாயிறு சேர்த்து 5 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் என எதிர்பார்ப்பு அரசு அலுவலர்கள் மத்தியில் எழுந்தது. 

இந்தநிலையில்,புதுச்சேரியில் நாளை 03-102025 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே பிராந்தியங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை தொடர் விடுமுறையை அடுத்து நாளையும் புதுச்சேரியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Following Tamil Nadu there will be a holiday in Puducherry tomorrow Minister Namachivayams announcement


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->