சாத்தனூர் அணையில் நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
Flood warning for coastal residents as water release at Sathanur Dam increases to 15000 cubic feet per second
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக, சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரூர், ஊத்தங்கரை, கல்லாறு பகுதிகளில் கனமழை பெய்து வருவைத்தால், நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையில் இருந்து 9,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113.60 அடியாக உள்ள நிலையில், நீர்வரத்து 12,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பப்பட்டுள்ளது.
English Summary
Flood warning for coastal residents as water release at Sathanur Dam increases to 15000 cubic feet per second