உல்லாச அழைப்பு... கடைசியில் நேர்ந்த பயங்கரம்! ஒகேனக்கல்லுக்கு அழைத்துச் சென்று கள்ளக்காதலன் செய்த கொடூரம் என்ன...? - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கோபி பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி புஷ்பராணி (43) குடும்ப பொறுப்பை ஏற்று வேட்டைக்காரன்கோவில் பகுதியில் செயல்படும் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற புஷ்பராணி வீடு திரும்பாததால், பதற்றமடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் கோபி காவலர்கள் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே பெரும்பாலை எல்லைக்குட்பட்ட தொப்பையாறு பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், உடலை பரிசோதித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மேற்கொண்ட ஆய்வில், அந்த பெண் கோபியில் மாயமான புஷ்பராணி என்பதும், அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து கோபி காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். புஷ்பராணியின் செல்போனில் பதிவான அழைப்புகளை ஆய்வு செய்ததில், கவுந்தப்பாடி ஆலத்தூர் ஜீவா நகர் சூளைமேட்டைச் சேர்ந்த மணி மகன் மகேந்திரன் (32) என்பவர் அடிக்கடி தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த தனது அக்காள் கணவர் சதீஷ் (35) உடன் சேர்ந்து புஷ்பராணியை கொலை செய்ததை மகேந்திரன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

புஷ்பராணி பணியாற்றிய நிறுவனத்திலேயே மகேந்திரனும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம், காலப்போக்கில் தகாத உறவாக மாறி, கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் ரகசியமாக சந்தித்து வந்துள்ளனர். பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால், அந்த உறவை வெளிப்படுத்துவதாக புஷ்பராணி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பதற்றமடைந்த மகேந்திரன், சதீஷுடன் ஆலோசித்து கொலை திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் அடிப்படையில், கடந்த 25-ந் தேதி புஷ்பராணியை ஏமாற்றி ஒகேனக்கலுக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, உறவை முடிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததால், ஆத்திரமடைந்த இருவரும் முன்கூட்டியே கொண்டு வந்த கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், உடலை காரில் எடுத்துச் சென்று தொப்பையாறு பகுதியில் வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த நிலையில், புஷ்பராணியின் செல்போன் பதிவுகள் வழியாக காவலர்கள் அவர்களை சிக்கவைத்து கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

flirtatious invitation horror that finally happened What cruelty who took him Okenakkal


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->