சென்னை திரும்பும் பொதுமக்கள் - அதிரடியாக உயர்ந்த விமான கட்டணம்.! 
                                    
                                    
                                   flight ticket price increase in tamilnadu 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒன்பது நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
தற்போது விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், மக்கள் விமானத்தில் பயணிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில், விமான பயண கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, மதுரை- சென்னைக்கு வழக்கமாக ரூ.3,999 ஆக கட்டணம் இருந்த நிலையில், இன்றைய தினம் விமானக் கட்டணம் ரூ.17,991 வரை அதிகரித்துள்ளது.
 
திருச்சி – சென்னை இடையே வழக்கமாக ரூ.2,199 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது ரூ.ரூ.11,089 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி – சென்னை இடையே வழக்கமான கட்டணம் ரூ 4,199 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,365ஆக உயர்ந்துள்ளது.
சேலம் – சென்னை இடையே விமானக் கட்டணம் ரூ 2,799 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.10,441 வரை அதிகரித்துள்ளது.
ஆனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       flight ticket price increase in tamilnadu