கொடி காத்த திரு.திருப்பூர் குமரன் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


பிரிட்டிஷ் அடக்குமுறையால் தான் வீழ்ந்தாலும் உயிர்ப்போகும் வரை நம் தேசியக்கொடியை கீழே வீழாது தாங்கிய, கொடி காத்த திரு.திருப்பூர் குமரன் அவர்கள் பிறந்ததினம்!.

 விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் 1904ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார்.

 இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார், குமரன். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் நடந்த அறப்போராட்டங்களில் கலந்து கொண்டார். பின், பல போராட்டங்களுக்கு தலைமையேற்றார்.

1932ம் ஆண்டு ஜனவரியில், காந்தியடிகளின் சட்ட மறுப்பு இயக்கத்திற்கு ஆதரவாக வீரத்திற்கு பெயர் போன தமிழக மண்ணில் போராட்டம் நடந்தது. இதுவே குமரனின் தலையெழுத்தை தீர்மானிக்கும் சரித்திர நிகழ்வாக அமைந்தது.

 காவலர்கள் தடியடி நடத்தி, துப்பாக்கி குண்டுகளை பாய்ச்சிய போதும் 'வந்தே மாதரம்... வந்தே மாதரம்...' என்று முழங்கிக் கொண்டே அவரது இறுதி மூச்சு நின்ற நாள், 1932ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியாகும்.

இந்திய விடுதலை போராட்ட தியாகி "வீரமுரசு" திரு.சுப்பிரமணிய சிவா அவர்கள் பிறந்ததினம்!.

விடுதலைப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான சுப்பிரமணிய சிவா 1884ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் பிறந்தார்.

  திருவனந்தபுரத்தில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பை உருவாக்கினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஊர் ஊராக நடந்து சென்று விடுதலைக் கனலை மூட்டினார்.

ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்சமித்திரன்' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம் உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. வீரமுரசு என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு 41வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Flag hoisting on Mr Thiruppur Kumarans birthday


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->