ராணிப்பேட்டையில் அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் - ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்.!!
five peoples injured girl died for accident in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டை அடுத்த வாணிச்சத்திரம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஆட்டோ, மற்றொரு லாரி, மற்றும் கார் ஆகியவை அடுத்தடுத்து மோதி நொறுங்கியது. இந்த சம்பவத்தில், ஆட்டோவில் குடும்பத்துடன் வந்த கார்த்திக் என்பவரின் ஒன்பது வயது மகள் நிஜிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விபத்தில் ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five peoples injured girl died for accident in ranipet