13 வயது சிறுமியின் வயிற்று வலி.. மருத்துவமனை அழைத்து சென்ற பெற்றோருக்கு கடும் அதிர்ச்சி.!
five hundred gram hair removed by 13 year old girl
கோவையைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதானால் அவரால் திரவ உணவு மட்டுமே உட்கொண்டு வந்தார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமியை பசரிசோதனை செய்துள்ளனர். அங்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ததில் சிறுமியின் வயிற்றில் திட வடிவில் கட்டி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக அந்த கட்டி பத்திரமாக அகற்றப்பட்டு, சிறுமி தற்போது நலமாக உள்ளார்.
சிறுமிக்கு அறுவைசிகிச்சை செய்தது தொடர்பாக குடலியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கூறுவதாவது, அறுவை சிகிச்சையின் போது சிறுமியின் வயிற்றில் தலைமுடி, ஷாம்பு பாக்கெட் துகள்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். பின், அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவினர் சிறுமியின் வயிற்றில் இருந்த சுமார் 500 கிராம் எடையில் கட்டிபோல் இருந்த தலைமுடியை பத்திரமாக வெளியில் எடுத்து அப்புறப்படுத்தினர்.
சிறுமியின் தாய்மாமா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்த மனஅழுத்தத்தை பற்றி பெற்றோருக்கு தெரியவில்லை. இதனால் சிறுமி தனது தலைமுடியை பிய்த்து அவ்வப்போது வாய்க்குள் போட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு இந்தச் செயல் நடந்திருக்கும் என கருதுகிறோம். தற்போது வயிற்றுக்குள் இருந்த 500 தலைமுடி அகற்றப்பட்டு சிறுமி தற்போது நலமாக உள்ளார் என்றனர்.
அந்த சிறுமிக்கு உளவியல் ஆலோசனை தரப்படுகிறது. மன அழுத்தம் பெரியவர்களை மட்டுமே பாதிக்காது சிறுவர்களும் அதனால் பாதிக்கப்படலாம். சிறுவர்களிடம் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
English Summary
five hundred gram hair removed by 13 year old girl