மீனவர்களிடம் இரட்டிப்பு தொகை கிடைக்கும் என தெரிவித்து ரூ. 8.14 கோடி மோசடி! தலைமறைவாக உள்ள நிதி இயக்குனர்கள்! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்ட மீனவர்களிடம் நிதி வைப்பு சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு இரட்டிப்பு தொகை தருவதாக தெரிவித்து, ஒரு ரூ. 8.14 கோடி மோசடி செய்த புகாரியில் 9பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 9 ரியல் டிரீம்ஸ் குழுமம் என்ற பெயரில் 2013ஆம் ஆண்டு நிதி நிறுவனம் தொடங்கியுள்ளனர். 

இதன் மூலமாக கிராமங்களில் நிதி வைப்பு சேமிப்பு திட்டங்களை நடத்தி வந்ததாகவும், மாதம் தோறும் 5 ஆண்டுகளுக்கு 500 அல்லது 1000 கட்டினால் முடிவில் இரட்டிப்பு தொகை கிடைக்கும் என தெரிவித்து 2013 முதல் 2017 வரை ரூ. 8.14 கோடி வசூல் செய்தனர். 

அதன்பிறகு 5ஆண்டுகள் முடிந்து இரட்டிப்பு தொகையை கேட்ட போது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் இருந்துள்ளதாக தெரியவந்தது. 

இதனால் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் சென்னை உச்ச நீதிமன்றத்தில், பணம் முதலீடு செய்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர்கள் 9 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுடைய முதலீட்டு பணம் மீட்டு தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தனர். 

இதனை அடுத்து உச்சநீதிமன்றம், பண மோசடியில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து உரிய விசாரணை எடுக்க அறிக்கை தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

அதன் பெயரில் போலீசார் கடந்த 8 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 9 பேரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fishermen get double amount Rs 8crore fraud


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->