மீன் பிடிக்க சென்ற மீனவர்.! படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம்.!
Fisherman dies after falling from boat in Thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ராமேஸ்வரம் சங்குமால் பகுதியை சேர்ந்தவர் பாபு தாசன்(54) என்பவர் தூத்துக்குடியில் தங்கி மீன் பிடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை பாபுதாசன் தருவைகுளத்தில் இருந்து தூத்துக்குடியை சேர்ந்த 14 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென பாபு தாசன் படகிலிருந்து தவறி விழுந்துள்ளார். உடனடியாக சக மீனவர்கள் கடலில் குதித்து பாபுதாசனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மயக்க நிலையில் இருந்த பாபு தாசனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட சகா மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Fisherman dies after falling from boat in Thoothukudi