சுட்டெரித்த வெயில்... பக்கென்று பிடித்த தீ... 3 லட்சம் மதிப்புள்ள பொருள் கருகிய சம்பவம்.!
fire at a tea shop near Trichy destroyed goods worth three lakhs due to intense heat
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையவனாகத்தில் செயல்பட்டு வரும் டீக்கடையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. சசிகுமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடையின் முன்பு வடை போன்ற பலகாரங்களை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது கடுமையான வெயிலின் தாக்கத்தினால் எண்ணெய் தீப்பிடித்து சட்டியிலும் தீ பற்றி எரிய தொடங்கியது இந்த தீ கடை முழுவதும் வேகமாக பரவியது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை பெற்றுக் கொண்டவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு படையினர் போராடி அந்த கடையில் பரவிய தீயை அணைத்தனர். பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு பதற்றம் ஏற்பட்டது. கடையில் தீப்பற்றி எரிந்ததால் மூன்று லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்ததாக டீக்கடை உரிமையாளர் குறிப்பிட்டார்.
English Summary
fire at a tea shop near Trichy destroyed goods worth three lakhs due to intense heat