உரிமைத்தொகையை செலவளித்ததால் மனத்தாபம்...! கணவர் வீட்டில் தூக்கிப் போட்டு தற்கொலை...! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்த 32 வயது ஈஸ்வரன், தனது 28 வயதான மனைவி ராமு உடன் வசித்து வந்தார்.

ஈஸ்வரனின் வங்கிக் கணக்கில் தமிழக அரசு வழங்கிய மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000 மற்றும் கோடை கால சிறப்பு நிதி ரூ.2,000 ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.5,000 இருந்தது.

ஆனால், ஈசுவரன் இந்த தொகையை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்து, கோபத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில், மனைவி பிரிந்ததில் மனவேதனையில் மூழ்கிய ஈஸ்வரன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூமாப்பட்டி காவலர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Feeling remorseful after spending money Husband commits suicide by hanging himself at home


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->